வலுவிழந்து வடக்கு நோக்கி நகர்ந்த ஜாவத் புயல் - ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கனமழை

Dec 6 2021 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜாவத் புயல் மேலும் வலுவிழக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்‍காமல் நகர்ந்து மேற்கு வங்கம், பங்களா தேஷ் கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுக நகரில் கனமழை கொட்டியது. இதனால் அங்கிருந்த குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், கோபால்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கனமழை பெய்தது. ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை அமராவதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களிலும் கனமழை பெய்தது. மேற்கு வங்கத்தில் பல்வேறு நகரங்களில் ​பலத்த மழை​ கொட்டியது. இதனிடையே, ஜாவத் புயல் வலுவிழந்து வடக்‍கு நோக்‍கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கனமழை பெய்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் பயிர்கள் நீரில் மூழ்கின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00