ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார் : இந்தியா, ரஷ்யா இடையேயான 21ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பு

Dec 6 2021 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா இடையேயான 21ஆவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காலை டெல்லி வருகிறார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உச்சிமாநாட்டின் இறுதியில் பிரதமர் மோடி மற்றும் புதின் முன்னிலையில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்தியாவில் 5 லட்சம் ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த பயணத்தின் போது, எஸ்-400 வான்பாதுகாப்பு சாதனத்தை விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வழங்க உள்ளார்.

இந்நிலையில், உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் நள்ளிரவில் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். திரு. செர்கே லாவ்ரோவ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00