காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்து விமர்சிப்பவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் - மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி

Dec 6 2021 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனம் செய்பவர்கள் புறக்‍கணிக்‍கப்பட்டு ஓரம் கட்டப்படுவதாக கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ரம்பனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 'இன்றைய காங்கிரஸ் தலைமைக்கு யாரும் சவால் விடுக்கவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி, விமர்சனங்கள் எழுந்த போதும், அப்போதைய தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் அதனை பொருட்படுத்தியது இல்லை என நினைவு கூர்ந்தார். ஆனால் இன்றைய காங்கிரஸ் தலைமை அவ்வாறு விமர்சனம் செய்யும் தலைவர்களை விரும்புவதில்லை என்றும் அவர்களை ஓரங்கட்டி விடுவதாகவும் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார்.

தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்க உள்ளதாக சிலர் பேசுவதாகவும், அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று கூறமுடியாது என்றும் அரசியலில் இருந்து விலக விரும்பினாலும், லட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் அரசியல் பயணத்தை தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00