இந்தியாவில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை - குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

Dec 6 2021 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இறுதி முடிவு எடுக்‍க மத்திய அரசின் நிபுணர் குழு இன்று முக்‍கிய ஆலோசனை நடத்துகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்‍க கோவாக்‍சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒமைக்‍ரான் வகை கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், 3-ம் தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து, கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி 3-ம் டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு இன்று முக்‍கிய ஆலோசனை நடத்துகிறது. இக்‍கூட்டத்தில் மருத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சிறார்களுக்‍கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்றை கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்ப்பார்க்‍கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்‍தி குறைவாக உள்ளோருக்‍கும், சிகிச்சையில் உள்ள புற்று நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளிட்டோருக்‍கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட அனுமதி வழங்கப்படும் என தகவல்​வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00