நாகலாந்தில் 15 அப்பாவி மக்‍கள் பலியான துப்பாக்கி சூடு சம்பவம் : விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு

Dec 6 2021 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகாலாந்து துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்ட படுகொலை என போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் டிரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த வாகனத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 19-ஆக அதிகரித்துள்ளது.

தீவிரவாதிகள் என நினைத்து துப்பாக்‍கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ள நிலையில், அப்பாவி மக்‍கள் கொல்லப்பட்டதற்கு திரு. ராகுல் காந்தி, செல்வி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது நாகாலாந்து​போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர். வாகனத்தில் சென்ற தொழிலாளர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்‍கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு தாக்‍குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை என்றும் வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றத்தை கட்டுப்படுத்த மோன் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00