இந்தியாவுக்கு 6 லட்சம் ஏ.கே.203 துப்பாக்கிகளை வாங்க கையெழுத்தானது ஒப்பந்தம் : இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

Dec 6 2021 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவின் அதிநவீன ஏ.கே.203 ரக துப்பாக்‍கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டை ஒட்டி இந்தியா வருகை தந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷொய்கு, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா - ரஷ்யா இடையே ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, ரஷ்யாவின் அதிநவீன ஏ.கே.203 ரக துப்பாக்‍கிகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 6 லட்சத்து ஓராயிரத்து 427 ஏ.கே.203 துப்பாக்‍கிகளை, உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் தயாரிக்‍க 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். மேலும், 2021 முதல் 2031 வரை, இரு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்புக்‍கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனிடையே, வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கரும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov-ம் டெல்லியில் இன்று காலை சந்தித்து இரு நாடுகள் இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் திரு. மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00