தடுப்பூசி செலுத்தப்பட்டதால், கொரோனா 3-ம் அலையில் உயிரிழப்புகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் தகவல்

Jan 20 2022 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா 2-ம் அலையைக்‍ காட்டிலும் 3-ம் அலையில், உயிரிழப்புகள் விகிதம் கணிசமாக குறைந்து காணப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ் பூஷன், கொரோனா 2-ம் அலையை விட 3-ம் அலையில், தொற்று கண்டறியப்பட்ட நபர்களுக்‍கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தார். மேலும், பொதுமக்‍களுக்‍கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தால், 3-ம் அலையின்போது உயிரிழப்புகளின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், 2-ம் அலையைக்‍ காட்டிலும் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள திரு. ராஜேஷ் பூஷன், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பாதிப்பு விகிதம் மிக உயர்ந்து காணப்படுவது கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். எனவே அந்தந்த மாநிலங்களுக்‍கு மருத்துவக்‍ குழுவினர் அனுப்பப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00