உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்தபோது கன்னட டி.வி நடிகை மரணம் : மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு

May 18 2022 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சேதனா ராஜ். இவர் தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய கன்னட மொழி சீரியலில் நடித்துள்ளார். சேதனா ராஜ்-க்கு படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தனது அழகை அறுவை சிகிச்சை மூலமாக மாற்றி அமைக்க அவர் முடிவு செய்து பெங்களூரு நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அந்த மருத்துவமனையின் மருத்துவர் நடிகைக்கு நெஞ்சு பகுதியில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்த போது திடீரென நடிகைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், சேத்தனா ராஜை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் நடிகை சேத்தனா ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00