குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்து : சம்பவ இடத்திலேயே 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு

May 18 2022 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், மார்பி மாவட்டத்தில் உள்ள ஹால்வாத் நகரில் தனியாருக்கு சொந்தமான உப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது, அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோடி, அவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேப் போன்று குஜராத் அரசு சார்பிலும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00