50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தகவல்
Jun 29 2022 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், விரைவில் மும்பை திரும்ப உள்ளதாகவும், சிவசேனா தலைவர் திரு.ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முகாமிட்டுள்ள திரு. ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். துணிச்சல் இருந்தால், தன்னுடன் தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பெயரை உத்தவ் தக்கரே வெளியிடட்டும் என்றும் தெரிவித்தார்.