இந்தியாவின் PSLV-C53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - சிங்கப்பூரின் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது

Jun 29 2022 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூரின் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள், PSLV-C53 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இஸ்ரோ மூலம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, PSLV-C53 ராக்கெட், சிங்கப்பூரின் DS-EO என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Satish Dhawan விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. DS-EO- உடன் சிங்கப்பூரின் NeuSAR மற்றும் SCOOB-I ஆகிய செயற்கைக்கோள்களும் நாளை விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது. இது அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும். சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00