புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : பேச்சுவார்த்தை தோல்வி - 6-வது நாளாக நீடிக்கும் போராட்டம்

Jun 29 2022 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகளின் வேலை நிறுத்தப் போராட்டம், 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

புதுச்சேரியில், அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், பணி பாதுகாப்புக் கோரியும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நகரம் மற்றும் உள்ளூர், தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் சேர்ப்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்துள்ளது. இதன் காரணமாக நகரம் மற்றும் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிரந்தர தொழிலாளர்கள் இன்றுமுதல் பணிக்கு திரும்பினர். தொலைதூர பேருந்துகள் காலை முதல் இயக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00