நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்‍கு ஆதரவாக சமூக வலைதள பதிவு -ராஜஸ்தான் தையல்காரர் படுகொலை சம்பவம் பற்றி விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு உதய்பூர் விரைவு

Jun 29 2022 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நபிகள் நாயகம் குறித்து கருத்து தெரிவித்த திருமதி. நுபுர் சர்மாவுக்‍கு ஆதரவாக சமூக வலைதள பதிவு வெளியிட்ட ராஜஸ்தானை சேர்ந்த தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்‍கு மாற்றப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் திருமதி. நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த தையல்காரரான திரு.கண்கையா லால் என்பவர், முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தையல்காரரை இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் நேற்று படுகொலை செய்தனர். தையல் கடையில் அளவு கொடுப்பது போல் நடித்து, தையல்காரரின் தலையை வெட்டி, அதனை வீடியோ பதிவும் செய்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். பிரதமர் திரு. மோடி உள்ளிட்டவர்களை எச்சரித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்‍கு மாற்றப்பட்டுள்ளது. இப்படுகொலை சம்பவத்தில், வெளிநாட்டு சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் உதய்பூர் விரைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00