மஹாராஷ்ட்ரா ஆளுநரின் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு - மனுவின் விவரங்களை பிற்பகல் 3 மணிக்‍குள் அனைத்து தரப்புக்‍கும் வழங்க சிவசேனாவுக்‍கு நீதிபதிகள் உத்தரவு

Jun 29 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்த ஆளுநர் திரு. கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்துள்ள மனு இன்று மாலை 5 மணிக்‍கு விசாரணைக்‍கு வருகிறது.

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்‍குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் திரு. கோஷ்யாரி கெடு விதித்துள்ளார். இதற்காக நாளை சட்டசபையை கூட்டும்படி சட்டசபை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, சிவசேனோ மூத்த தலைவர் திரு. ஏக்‍நாத் ஷிண்டே தலைமையில் அசாமில் முகாமிட்டுள்ள அக்‍கட்சியின் 39 அதிருப்தி எம்.எல்.ஏக்‍களும், நாளை நடைபெறவுள்ள நம்பிக்‍கை வாக்‍கெடுப்பில் பங்கேற்கவுள்ளதாக​தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்ட்ரா ஆளுநரின் உத்தரவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்துள்ளது. 16 எம்.எல்.ஏக்‍கள் தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநரின் ஆணை சட்டவிரோதமானது என மனுவில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00