ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் வரும் 5-ம் தேதி தொடக்கம்
Jun 29 2022 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.
குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடையும் நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற ஜூலை 22 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.