உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளக்காடான பகுதிகள் - நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Jun 30 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இரவு முதல் பெய்துவரும் கனமழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சமோலி அருகே பத்ரிநாத் சென்றுவிட்டு திரும்பிய பக்தர்களின் கார் ஒன்றின் மீது பாறாங்கல் சரிந்து விழுந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.