மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் - கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 4 பேர் அறிவிப்பு

Jul 7 2022 6:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்‍கப்பட்டுள்ளார். இவருடன் கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 4 பேரும் மாநிலங்களை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் திரு.மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா என பாராட்டியுள்ளார். அவரை நாடாளுமன்ற எம்பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பி.டி.உஷாவிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00