நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாளை மறுநாள் செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி வைக்கிறார் பிரதமர் மோடி - நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
Aug 13 2022 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி, சிறப்புரை ஆற்றவுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 75-ம் ஆண்டு சதந்திர தினத்தை ஒட்டி நாளை மறுதினம் டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி பிரதமர் திரு. மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து செங்கோட்டையை சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பட்டம், டிரோன், ராட்ச பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உயரமான இடங்களில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பட்டம், பலூன் உள்ளிட்டவை பறப்பதை கண்காணிக்க பட்டம் விடுபவர்களையே கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் பிரத்யேகமாக பணியமர்த்தியுள்ளனர்.