வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை வசூலிக்க அநாகரிகமாக நடந்துகொள்ளக்‍ கூடாது : ரிசர்வ் வங்கி உத்தரவு

Aug 13 2022 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க எவ்வகையிலும் அநாகரிகமாக நடந்துகொள்ளக்‍ கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து கடனை வசூலிக்‍க வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படாததால், தற்போது கூடுதலாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை, கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய் மொழியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது என்றும், தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக்கூடாது என்றும், கடன் தவணையை செலுத்துமாறு, இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00