ராகுல் காந்தி காஷ்மீர் சென்றடைவதற்குள் காங்கிரஸ் முக்தி பெற்றுவிடும் - பா.ஜ.க. கேலி

Sep 27 2022 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை திரு.ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என பா.ஜ.க. கேலி செய்துள்ளது.

அசாமின் தூப்ரி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் பவனில் இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வரும் நவம்பர் 1-ம் தேதி அசாமில் நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி ஆலோசிப்பதற்காக நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டியின் சில தலைவர்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விமர்சித்துள்ள பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் அமைச்சரான திரு. பிஜூஷ் ஹசாரிகா, காங்கிரசில் நடக்‍கும் சம்பவங்களை பார்க்கும்போது, காஷ்மீரை திரு. ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் போல் தெரிவதாக கேலி செய்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்‍கத்தில், காங்கிரஸ் தொண்டர்களின் மோதல்கள் அடங்கிய செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00