பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு- ஐந்து ஆண்டுகளுக்‍கு தடை விதித்து உத்தரவு

Sep 28 2022 7:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத இயக்‍கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு மீது 5 ஆண்டுகளுக்‍கு தடை விதிக்‍கப்படுவதாகவும், தடை உடனடியாக அமலுக்‍கு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அந்த அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கேரளத்தில் 22 பேரும், தமிழகத்தில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, மஹாராஷ்ட்ரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் மாநில காவல் துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். இதில் கர்நாடகாவில் மட்டும் 40 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத இயக்‍கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது 5 ஆண்டுகளுக்‍கு தடை விதிக்‍கப்படுவதாகவும், தடை உடனடியாக அமலுக்‍கு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரதமர் திரு. மோடி பீகார் தலைநகர் பாட்னா சென்றிருந்தபோது, அவரை கொல்ல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி திட்டம் தீட்டியதாக அமலாக்‍கத்துறை சில தினங்களுக்‍கு முன்னர் திடுக்கிடும் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00