திஹார் சிறை அறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழும் மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் : பரபரப்பை ஏற்படுத்தும் சி.சி.டி.வி. காட்சிகள்
Nov 27 2022 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழும் காட்சிகள் மீண்டும் வெளியாகியுள்ளன. டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருவது குறித்து ஏற்கெனவே சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியிருந்தன. இந்நிலையில், மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் அறையை சிலர் பெருக்கி, படுக்கை விரிப்புக்களைச் சரி செய்வது, பின்னர் அவரைக் காணவந்தவர்களுடன் சிறை அறையில் அவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.