இந்தியாவுக்கு கிடைத்த ஜி20 தலைமை பதவியை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு - வாய்ப்பை பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்
Nov 27 2022 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்றும், உலகளாவிய நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார். ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என கூறிய பிரதமர் மோடி, அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சிக்கும், அது தொடர்பான விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளதாக கூறினார்.