சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்திய சி.ஐ.டி.சி.ஏ. மாநாட்டை புறக்கணித்தது, இந்தியா - கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாலத்தீவு, ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

Nov 28 2022 9:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவால் கூட்டப்பட்ட இந்திய பெருங்கடல் பிராந்திய கூட்டத்தில் இந்தியா அழைக்கப்படாத நிலையில், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 19 நாடுகள் பங்கேற்றுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது...இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்கவே சீனா இத்தகைய கூட்டத்தை கூட்டியுள்ளதாக பிரபல மூலோபாய சிந்தனையாளர் பிரம்மா சல்லானே கூறியுள்ளார்.

இந்தியா உருவாக்கிய இந்திய பெருங்கடல் ரிம் சங்கம் என்ற கூட்டமைப்புக்கு போட்டியாகவே தற்போது புதிய கூட்டமைப்பை ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தில் 23 நாடுகள் இணைந்துள்ளதுடன் இந்தியா மிக வலுவான வேர்களுடன் காலூன்றி உள்ளதால் அதை தடுக்க சிறுபிள்ளைத்தனமாக, சீனா இக்கூட்டத்தை கூட்டியுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், ஆப்கன் உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளில், கணிசமான முதலீடுகளை குவித்துள்ள சீனா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க, இந்தியாவுடன் போட்டியிடுவதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என பிரம்மா சல்லானே கூறியுள்ளார்.

தனது நாட்டை விட்டு வெளியே டிஜி பவுட்டியில் கடற்படை தளத்தை அமைத்துள்ள சீனா, இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளதுடன், பாகிஸ்தானின் குவாடார் பகுதியிலும் துறைமுகத்தை அமைத்து வருவது இந்தியாவை அச்சுறுத்தவே என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாம் என்னதான் அமைதி, சமாதானம் என்று போனாலும், சீனா விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00