மகாராஷ்டிராவின் பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - மேம்பாலத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Nov 28 2022 9:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூரில் உள்ள பல்ஹார்ஷா ரயில்வே நிலைய நடை மேம்பாலத்தின் சிலாப்புகள் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
பல்ஹார்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஒன்றாவாது மற்றும் 2வது நடைமேடையை இணைக்கும் நடை மேம்பாலத்தில் பயணிகள் அதிகமானோர் நடைமேம்பாலத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நேற்று மாலை 5.10 மணியளவில் மேம்பாலத்தின் ஒருபகுதியில் இருந்த சிலாப்புகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தன. இதில் மேம்பாலத்தில் நடந்து சென்றவர்கள், 20 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்தனர்.
இந்த விபத்தில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடைமேம்பால விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.