புதுச்சேரி மத்திய சிறையில் இரு தண்டனை கைதிகளுக்கு இடையே மோதல் : தாக்குதல் நடத்திய தண்டனை கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு
Nov 28 2022 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மத்திய சிறையில் குடிநீர் பிடிப்பதில் இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 24ம் தேதி சிறை கழிவறை அருகே தண்டனை கைதி மூலவன் என்பவர் மற்றொரு தண்டனை கைதி குமரன் என்பவரை இரும்பு வாளியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூலவன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மூலவன் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.