கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்த நண்பன் கொலை : 3 பேர் கைது
Nov 28 2022 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் கொடுத்த காரணத்தால் நண்பனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கனுவாபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பிரவின் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, அவரது நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது பிரவின் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி பிரவினை மதுபானம் அருந்த அழைத்து சென்று வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில்அடைத்தனர். மேலும் ஒரு குற்றவாளியான நித்தியானம் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.