நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் : டெல்லி ராம் லீலா மைதானத்தில் மாநாடு
Nov 28 2022 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட, அகில இந்திய எஸ்சி, எஸ்டி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வலியுறுத்தி, அகிய இந்திய எஸ்சி, எஸ்டி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் மாநாடு நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து எஸ்சி, எஸ்டி சங்கங்களை சேர்ந்தவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்திய அரசியல் சாசனத்திற்கு அடிகோலிட்ட அம்பேத்கர் பெயரை நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு சூட்டுவதே பொருத்தமாக இருக்கும் என மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.