குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
Nov 29 2022 6:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. நாளை ஒரு நாள் ஓய்வையடுத்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். எஞ்சிய 93 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது.