நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு எல்லை மீறிச் செல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் - நீதித்துறையை நடவடிக்‍கை எடுக்‍க வைத்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை

Nov 29 2022 6:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசு எல்லை மீறிச் செல்வதாக உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தாமதமாவது தொடர்பான மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நியமனங்களை தாமதப்படுத்தி எல்லை மீறுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நீதித்துறையை முடிவெடுக்க வைத்து விட வேண்டாம் என்றும் எச்சரித்தனர். கொலிஜியம் என்பது வேற்று கிரகவாசிகளுக்கானது என்ற மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜுவின் கருத்துக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கொலீஜியம் அனுப்பிய 20 நீதிபதிகள் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலை மறு பரிசீலனை செய்யுமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00