டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாப்பை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனம் மீது தாக்குதல் - வாள்களுடன் சூழ்ந்த கும்பலை துப்பாக்கியை காட்டி விரட்டிய போலீஸ்
Nov 29 2022 6:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காதலி ஷ்ரத்தா வால்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப் அமீன் பூனாவாலாவை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனம் மீது ஒரு கும்பல் கத்தி மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திகார் சிறையில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அப்தாப், உண்மை கண்டறியும் சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை மீண்டும் வாகனத்தில் ஏற்றி போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வழிமறித்த கும்பல் ஒன்று, வாட்களால் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் வேனின் கதவைத் திறந்து அப்தாபையும் தாக்க முயற்சித்தது. இதையடுத்து போலீசார் கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டி, கும்பலை விரட்டி அடித்தனர். இந்த தாக்குதலுக்கு இந்து சேனா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.