குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு
Dec 2 2022 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 60 புள்ளி 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வாக்குச் சாவடிகளில் இருந்து தரவுகள் பெறப்படாததாலும், அதில் தபால் வாக்குகள் இடம்பெறாததாலும் இது தற்காலிகமானது என்றும் கூறியுள்ளனர். மேலும் அதிகபட்சமாக தாபி மாவட்டத்தில் 72 புள்ளி 32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும். 68 புள்ளி 09 சதவீத வாக்குப்பதிவுடன் நர்மதா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பாவ்நகரில் குறைந்த பட்சமாக 51 புள்ளி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.