நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல்
Dec 2 2022 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கைக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 15 ஆயிரத்து 871 கோடி ரூபாய் மதிப்பிலான மின்துறை திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய நிதிஷ்குமார், நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டி இருப்பதாக கூறினார். உதாரணத்திற்கு, மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதாக தெரிவித்தார். எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றும்போது, ஏன் சில மாநிலங்கள் மட்டும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.