போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Dec 2 2022 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று FM ரேடியோக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. சில FM ரேடியோ சேனல்கள், மது, போதைப் பழக்கம், வன்முறை மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் பெருமிதமாக முன்வைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்வது கவனத்திற்கு வந்துள்ளதாக மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே போதைப் பழக்கம், ஆயுதக் கலாச்சாரத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FM ரேடியோ சேனல்களுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.