குஜராத்தில் 140க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை... விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை
Dec 8 2022 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் இம்முறையும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மொத்த 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 89 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 1ம் தேதியும், 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் கடந்த 5ம் தேதியும் நடைபெற்று முடிந்தன. பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 182 தொகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2ம் இடத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி சொற்ப இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 92 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி பெரும்பான்மையை பெற்றுவிடும் என்பதால் பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.