மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என எதிர்பார்ப்பு-மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல்

Feb 1 2023 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாக கூறப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் தொகை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு சம்பளதாரர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. வீட்டுக்கடன் தொடர்பாக சலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையே உள்ளது. வங்கியில் கடன் பெற்று அதில் வீடு வாங்கி அதிலேயே குடியிருக்கும் வீட்டுக்கடன்காரர்களுக்கு பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

PM-KISAN நிதியுதவித் திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவி தொகையை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறையை நவீனமயமாக்க பல திட்டங்களை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் அதி நவீன அதிகவேக சிறப்பு ரயில் திட்டமான வந்தே பாரத் திட்டத்தை முழு வீச்சில் கொண்டு செல்லும் விதமாக 400 முதல் 500 வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2030 ஆண்டுக்குள் நாட்டின் ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் திட்டத்தை அரசு கொண்டுள்ளதால் இது தொடர்பான திட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00