குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு - பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு சந்தித்தார்
Feb 1 2023 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று, தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் பெற்றார்.