2023-24ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார நிதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு
Feb 1 2023 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2023-24ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலை ஒட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் குடியரசு தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று, பட்ஜெட்டுக்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து நாடாளுமன்றம் வந்த அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.