கடந்த 9 ஆண்டுகளில் 5 வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது - உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டள்ளதாக அறிவிப்பு

Feb 1 2023 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

2023 - 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும் என்றும் அதன் மூலம் 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் உற்பத்தி செய்யப்படும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 20 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரனாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு மையங்கள் நிறுவப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 10,000 கோடி ரூபாயும், பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. படுத்தப்படுவர் சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். சுற்றுலாவை மேம்படுத்த யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு 75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டு பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 2 லட்சம் ரூபாய் சேமிப்புக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது,.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00