செல்போன் உதிரி பாகங்கள், டிவி பேனல், பொம்மை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான சுங்க வரி குறைவு - சுங்க வரியானது 23 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு
Feb 1 2023 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுங்கம் மற்றும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், என்னென்ன பொருட்கள் விலை உயரும், என்னென்ன பொருட்கள் விலை குறையும் என்பது குறித்து பார்க்கலாம்.
மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், மடிக்கணினிகள், டிவி பேனல் உதிரி பாகங்கள், லித்தியம் பேட்டரி, எத்தில் ஆல்கஹால், ஆகியவற்றின் விலை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் சிகரெட், ரப்பர் பொருட்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தால் செய்யக் கூடிய அலங்கார பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர உள்ளன. சிகரெட்டுக்கு 16 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரப்பருக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தால் செய்யப்படக் கூடிய பொருட்களுக்கான வரியும் 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.