உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து - தீயை போராடி அணைத்த வீரர்கள்
Feb 1 2023 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள துணிக்கடை ஒன்றில் பற்றிய தீயை தீ அணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். துணிக்கடையின் முதல் தளத்தில் பற்றிய தீ பின்னர் மூன்று தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீ அணைப்பு துறை வீரர்கள், 7 தீ அணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். சில மணி நேரங்களுக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.