இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : போக்குவரத்துக்காக சாலையில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி தீவிரம்
Feb 1 2023 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சலப்பிரதேசத்தில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் 50-க்கும் மேற்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. லால் ஸ்பிட்டி மாவட்டத்தில் சாலைகளையும், பச்சை புல்வெளிகளையும் வெண்பனி போர்த்தியுள்ளது. சிசு பகுதி சாலையில் 2 அடி உயரத்துக்கும் மேலே பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், போக்குவரத்தை சீர்செய்ய, சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.