ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
Feb 1 2023 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மிகவும் ஆபத்தான பனிச்சரிவுகள் ஏற்படும் என்றும், அதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ஏற்கெனவே பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்திருந்தது. இதே போல் பொதுமக்கள் யாரும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், Gulmarg பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிச்சறுக்கு விளையாடும் பனிமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 19 பேர் மீட்கப்பட்டனர். இருப்பினும், வெளிநாட்டினர் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.