மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு
Feb 1 2023 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2023- 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதில் தனிநபர் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இது போன்ற சலுகைகளை தாம் வரவேற்பதாகவும், நிதி அமைச்சரை இந்த விஷயத்தில் பாரரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தமது கருத்தைத் தெரிவிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மிகமோசமான பொருளாதார நிலையை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை என விமர்சித்துள்ளார்.