மத்திய பட்ஜெட் மளிகைக்கடைக்காரரின் பில் போல் உள்ளது : பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சனம்
Feb 1 2023 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போன்று உள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குறிக்கோள் என்ன என்பதை தெளிவுப்படுத்துவதே உண்மையான பட்ஜெட் என குறிப்பிட்டுள்ளார். முதலீடுகளின் நிலை, வருவாய் விகிதம், பொருளாதார உத்திகள், வளங்களை திரட்டுதல் உள்ளிட்டவை அடங்கியதே ஜி.டி.பி. எனவும் சுப்ரமணிய சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.