மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பட்ஜெட் தாக்கல் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
Feb 1 2023 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு பட்ஜெட் தீர்வு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். கல்விக்கான பட்ஜெட் 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்றும் சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைப்பது தீங்கு விளைவிக்கும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு டெல்லி மக்களிடம் மீண்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.