விக்‍டோரியா கவுரி உயர்நீதிமன்ற ​நீதிபதியாக பதவியேற்பதில் தடையில்லை - மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 7 2023 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞரான விக்டோரியா கௌரி உள்ளிட்ட 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அவர்களில் விக்டோரியா கௌரி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளில் தொடர்புடையவர் என்பதாலும் அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் பி.வி.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கௌரி உள்ளிட்டோரின் பதவியேற்பு விழா நடைபெற இருந்ததால், அதற்கு முன்னதாக இந்த வழக்கு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கின் முடிவு பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்துதான் கொலீஜியம் அமைப்பு விக்டோரியா கௌரியை பரிந்துரைத்ததாக தெரிவித்தனர்.

மாணவ பருவத்தில் தானும் அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்ட நீதிபதி கவாய், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற உதாரணங்கள் இருப்பதாக கூறினார். மேலும் நீதிபதிகளை அவர்களின் சமூக வலைதள பதிவு அடிப்படையில் பின்தொடர முடியாது என்றும் மற்றொரு நீதிபதி சஞ்சீவ் கன்னா தீர்ப்பில் தெரிவித்தார். இவற்றின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்க தடையில்லை என கூறிய நீதிபதிகள், கௌரிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00