மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள துருக்கி விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு - மோப்ப நாய்கள், மீட்பு உபகரணங்கள், மருந்து பொருட்களுடன் புறப்பட்ட ராணுவம் துருக்கி சென்றடைந்தது

Feb 7 2023 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலநடுக்‍கத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ள துருக்கி நாட்டில் மீட்புப் மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் பேரிடர் மேலாண்மை படை வீரர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நிலநடுக்‍கத்தால் துருக்கியின் ஹத்தே நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் துருக்கி ராணுவம் ஈடுபட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 101 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் விமானப்படையின் சி17 விமானம் மூலம் துருக்கி விரைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகள், மோப்ப நாய் குழு, உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விமானம் மூலம் துருக்‍கிக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00