"இனி வெளிநாடுகளிலும் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்" : புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ள போன்பே
Feb 7 2023 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான போன்பே, புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, போன்பே செயலியில் உள்ள UPI ஐடியை பயன்படுத்தி வெளிநாடுகளிலும் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தற்போது, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் போன்பே மூலம் பணிப் பரிவர்த்தனை செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளில் UPI இன்டர்நேஷனல் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.