ரயில் விபத்துக்கு இடையே தென்பட்ட மனிதநேயம் : காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்க மருத்துவமனையில் குவிந்த கூட்டம்
Jun 3 2023 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் செய்ய குவிந்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 238 பேர் பலியான நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 600க்கும் மேற்பட்டோர் சோரோ, கோபால்புர், கான்டாபாடா சுகாதார மையங்கள் மற்றும் பாலசோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தோருக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுவதால், குருதி தானம் செய்வதற்கு மருத்துவமனைகளில் தன்னார்வர்வலர்கள் குவிந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் ரத்தம் தானம் செய்து வருவது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.